கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் தோட்டா பறிமுதல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 15 ஜூன், 2025

கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் தோட்டா பறிமுதல்!



 கோவை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் தோட்டா பறிமுதல்!


கோவை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கம்போலசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெங்களூர் செல்லும் விமானத்தில் பயணம் செய்வதற்காக வந்த பெண் பயணி ஒருவரின் உடமைகளை போலீசார் சோதனை செய்த பொழுது அவரிடம் 9எம் எம் தோட்டா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவரது பெயர் சரளா ராமகிருஷ்ணன் என தெரிய வந்தது. அவரிடம் இருந்து தோட்டாவை பறிமுதல் செய்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உடனடியாக பீளமேடு காவல்துறையிடம் அவரை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார்  தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad