வேலூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணை ப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்! பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு!
வேலூர் , ஜூன் 4 -
வேலூர் மாவட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (DISHA Meeting) மாவட்ட ஆட்சி தலைவர் சுப்புலக்ஷ்மி அவர்கள் தலை மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த் பங்கேற்று மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப் படும் வளர்ச்சி பணிகளின் நிலை மற்றும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தார்.
முன்னதாக இரயில்வே துறை சார்ந்த கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தில் உள்ள இரயில்வே கேட்களில் மேற் கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளின் நிலை குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
கூட்டத்தில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பி னர் A.C. வில்வநாதன் எம் எல் ஏ அவர் கள், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் எம் எல் ஏ அவர்கள் மாவட்ட ஊராட்சிமன்ற குழு தலைவர் மு.பாபு அவர்கள், மாவட்ட காவல் கண் காணிப்பாளர், திட்ட இயக்குனர், மாவட்ட வருவாய் அலுவலர், மாநகர ஆணையா ளர், ஒன்றிய குழுதலைவர்கள், ஊராட்சி மன்றதலைவர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக