தேவாலா குளோபல் உயர்நிலை பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்க பட்டது:
தேவாலா வனசரகம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நெல்லியாளம் நகராட்சி, ஆல் தி சில்ட்ரன், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாளர் அனிஷ்பாபு தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ராஷிதா, வானவர் சுரேஷ்குமார், நெல்லியாளம் நகராட்சி தூய்மை தூதுவர்கள் சிந்துஜா, தினேஷ்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேவாலா வனசரகர் சஞ்சீவி, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், பள்ளி நிர்வாக அலுவலர் விக்னேஷ்வரன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் குறித்து பேசினார்கள்.
சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்து கொண்டனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
பள்ளி ஆசிரியர்கள், நகராட்சி தூய்மை தூதுவர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக