சேத்தியாத்தோப்பு அருகே வாய்க்கால் தூர்வாரிய பணியை பாதியில் நிறுத்தியதால் ஜேசிபி எந்திரம் சிறைபிடிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 9 ஜூன், 2025

சேத்தியாத்தோப்பு அருகே வாய்க்கால் தூர்வாரிய பணியை பாதியில் நிறுத்தியதால் ஜேசிபி எந்திரம் சிறைபிடிப்பு.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே விழுப்பெருந்துறை கிராமத்தில் கருங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வாய்க்கால் பாதி தூரம் வரை தூர்வாரப்பட்ட நிலையில் திடீரென ஜேசிபி எந்திரம் தூர் வாரும் பணியை பாதியில் நிறுத்திவிட்டு, ஜேசிபியை லாரியின் மூலம் எடுத்து செல்ல ஓட்டுநர் முயற்சித்தார். இதனை அறிந்து கருங்கால் வாய்க்கால் முழுவதையும் தூர் வாராமல் இங்கிருந்துஜேசிபி எந்திரத்தை எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறிய அப்பகுதி விவசாயிகள் லாரியிலிருந்து ஜேசிபியை கீழே இறக்குமாறு கூறி லாரியை முற்றுகையிட, ஜேசிபி ஓட்டுநர் மழுப்பலாக பதில் கூற அவர்களுக்குள் வாக்குவாதமானது.
இதனால் விவசாயிகள், வாய்க்காலை முழுமையாக தூர் வாராமல் பாதியில் நிறுத்தி விட்டுச் செல்வதை நாங்கள் ஏற்கமாட்டோம். ஜேசிபி எந்திரத்தை இங்கிருந்து எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று கூறி ஓட்டுனரையும் ஜேசிபி ஏற்றிய லாரியையும் முற்றுகையிட்டனர். இதனால் விழுப்பெருந் துறை கிராமப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வாய்க்காலை பாதி அளவு மட்டுமே தூர் வாரிவிட்டு சென்றால் மீதமுள்ள இடங்களின் வேலை அத்துடன் நிறுத்தப்படும் என்று சந்தேகப்படும் விவசாயிகள் கருங்கால் வாய்க்காலை முழுமையாக தூர் வாரா விட்டால் இப்பகுதி விவசாயிகளைஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad