குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 ஜூன், 2025

குடும்ப அட்டைதாரர்கள் நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டம் - கைரேகைகளை பதிவு செய்யாமல் இருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுவரும் AAY/PHH குடும்ப அட்டைதாரர்கள் மொத்தம் 9,27,955/- உள்ள நிலையில் இதுவரை 7,94,044/- குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே கை ரேகை பதிவு (eKYC) செய்துள்ளார்கள் இன்னும் 1,33,547/- குடும்ப அட்டைதாரர்கள் கை ரேகை பதிவு செய்யாமல் உள்ளனர். 

அரசின் சலுகைகளை தொடர்ந்து பெற தங்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கைரேகைகளை பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வெளியூரில் / வெளி மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்துவரும் நபர்கள் மற்றும் பள்ளிக் கல்லூரிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகள் தாங்கள் இருக்கும் ஊரில்/ மாவட்டத்திலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று தங்கள் ரேகையை பதிவு செய்ய (eKYC) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

மேற்படி பணி விரைவில் முடிவுற இருப்பதால் AAY/PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர் அனைவருடன் அருகில் உள்ள நியாய விலைக் கடைகளுக்குச் சென்று விரல் ரேகை / கண் விழி பதிவு (ஐரிஸ்) செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad