எம்ஆர்பி' விலைக்கு மேல் அதிகமாக விற்பனை செய்யப்படும் பாட்டில் குளிர்பானங்கள். நடவடிக்கை எடுக்குமா மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை? - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 ஜூன், 2025

எம்ஆர்பி' விலைக்கு மேல் அதிகமாக விற்பனை செய்யப்படும் பாட்டில் குளிர்பானங்கள். நடவடிக்கை எடுக்குமா மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை?

 '


எம்ஆர்பி' விலைக்கு மேல் அதிகமாக விற்பனை செய்யப்படும் பாட்டில் குளிர்பானங்கள். நடவடிக்கை எடுக்குமா மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை? பொதுமக்கள் கேள்வி.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சிறிய பெட்டி கடைகள் முதல் பேக்கரி உள்பட பெரிய அளவிலான சில கடைகளில் பாட்டில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் குளிர்பானங்கள் மேக்ஸிமம் ரீடைல் பிரைஸான 'எம்ஆர்பி' விலைக்கும் மேல் அதிகமாக கடை விற்பனையாளர்கள் வியாபாரம் மேற்கொண்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் முன் வைத்தனர். இதுகுறித்து சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், "பாட்டில் குளிர்பானங்களின் எம்ஆர்பி விலையானது பாட்டிலில் சில குளிர்பான பாட்டில்களில் 10 ரூபாய் எனவும், சில குளிர்பான பாட்டில்களில் 12 ரூபாய் எனவும் அச்சடிக்கப்பட்டுள்ள நிலையில், சில கடை உரிமையாளர்கள் 15 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து கடை உரிமையாளர்களிடம் பாட்டிலில் அச்சடிக்கப்பட்டுள்ள எம்ஆர்பி விலையை காண்பித்து கேள்வி எழுப்பினால், அனைத்து கடைகளிலும் இவ்வாறுதான் விற்பனை செய்கின்றனர் எல்லோரிடமும் சென்று கேளுங்கள், யாரிடம் சென்று வேண்டுமானாலும் புகார் அளித்துக் கொள்ளுங்கள் என்று கூச்சமே இல்லாமல் பதில் கூறுகின்றனர். எனவே அரசின் சட்ட விதிமுறை, வழிகாட்டு நெறிமுறைகளை மீறி எம்ஆர்பி விலையை தாண்டி 15 ரூபாய் வரை பாட்டில் குளிர்பானங்களை விற்பனை செய்து வரும் கடைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்தல், கடை உரிமையாளர்களின் மீது கடும் நடவடிக்கை, எச்சரிக்கை மற்றும் அபதார தொகை விதித்தல் போன்ற கடும் நடவடிக்கைகளை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர் உடனடியாக மேற்கொண்டு, யாரும் பெரிதாக கண்டுகொள்ளாத இப்பகல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad