மேட்டுப்பாளையத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி திமுகவினர் இணைப்பு வழங்கி கொண்டாட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 ஜூன், 2025

மேட்டுப்பாளையத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி திமுகவினர் இணைப்பு வழங்கி கொண்டாட்டம்


மேட்டுப்பாளையத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி திமுகவினர் இணைப்பு வழங்கி கொண்டாட்டம் !



கோவை மேட்டுப்பாளையத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் நகர கழகம் சார்பில் நகரக் கழக செயலாளர்முனுசாமி, முகமது யூனுஸ்,தலைமையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி ஆர் சண்முகசுந்தரம், அஷ்ரப் அலி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா அருண்குமார், காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ் எம் டி கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு அலங்கரிக்கப்பட்ட கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் மெஹரினா பர்வீன் துணைத் தலைவர் அருள் வடிவு இந்து அறநிலைத்துறை குழு உறுப்பினர் எஸ் எம் டி கல்யாணசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டு தொடர்ந்து பொதுமக்களுக்கு கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad