ஊட்டி நகராட்சி மாதாந்திர நகர்மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 ஜூன், 2025

ஊட்டி நகராட்சி மாதாந்திர நகர்மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார்


பார்சன்ஸ்வேலி பகுதிகளில் மரங்கள் மின் கம்பிகள் மீது விழுந்து மின் தடை ஏற்படுவதால், நகரின் தண்ணீர் விநியோகம் செய்வதில் பாதிப்பு இப்பிரச்சனையை தீர்க்க  நிலத்தடி மின் கேபிள் அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தி வருகிறது.


ஊட்டி நகராட்சி மாதாந்திர நகர்மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரவிக்குமார் மற்றும் கமிஷ்னர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


கூட்டத்தில், துணைத் தலைவர் ரவிக்குமார் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யும் சமயங்களில் பார்சன்ஸ்வேலி பகுதிகளில் மரங்கள் மின் கம்பிகள் மீது விழுந்து மின் தடை ஏற்படுவதால், நகரின் தண்ணீர் விநியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்படுகிறது.


 எனவே, இப்பிரசனையை களைய பார்சன்ஸ்வேலி அணையில் உள்ள நீரேற்று மையத்திற்கு நிலத்தடி மின் கேபிள் அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தி வருகிறது. 


தற்போது, தமிழக அரசின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், மத்திய அரசிடம் பரிந்துரை செய்து விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில், இதற்கான அனுமதி கிடைத்துவிடும். அதன்பின், மழைக்காலங்களிலும் தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 


மேலும், இது போன்று மழைக்காலங்களில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டால், ஊட்டி நகரில் உள்ள கிணறுகளில் தூர்வாரி மோட்டார் பொருத்தி அதன் மூலம் தண்ணீர் வழங்குவதற்காக ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 


ஆனால், அந்த திட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது தெரியவில்லை. எனவே, அந்த திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகள் சீரமைக்க பல கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாலைகள் சீரமைக்கப்படுகிறது


. ஆனால், கடந்த காலங்களில் சாலை சீரமைக்கப்பட்டு 5 ஆண்டுகள் வரை சாலையை கேபிள் பதிக்க தோண்டுவதற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படமாட்டாது. ஆனால், தற்போது சாலை சீரமைத்தை ஒரு சில நாட்களிலேயே அந்த சாலையை தோண்டி கேபிள் அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. 


இதனை தடுக்க வேண்டும். கேசினோ சந்திப்பில் இருந்து சேரிங்கிராஸ் செல்லும் கிரீன்பீல்டு சாலை வழியாக அனைத்து வாகனங்களையும் செல்ல காவல்துறை அனுமதித்துள்ளது. ஆனால், அந்த சாலையோரங்களில் பழுதடைந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 


எனவே, அந்த சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். மேலும், இச்சாலையில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்க கூடாது. அதேபோல், எட்டினஸ் சாலையிலும் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. 


இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், சாலையோரத்தில் உள்ள நடைபாதைகள் பயன்பாடின்றி உள்ளது. எனவே, இச்சாலையிலும் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும். மேலும், இச்சாலையில் பார்க்கி கட்டணம் வசூலித்தால், அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க முடியும் என பேசினார்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad