சேதமடைந்துள்ள 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்க பட்ட பாரதியார் நகர் நடைபாதையை சீரமைக்க அதிமுக நகர மன்ற உறுப்பினர் லயலோகுமார் கோரிக்கை
ஊட்டி நகராட்சி மாதாந்திர நகர்மன்ற கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, தலைவர் வாணீஸ்வரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரவிக்குமார் மற்றும் கமிஷ்னர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிமுக நகர மன்ற உறுப்பினர் லயலோகுமார் பேசும் போது பார்சன்ஸ்வேலியில் பணியாற்றும் ஊழியர்களை தொடர்பு கொள்ளும் வகையில் வாக்கி டாக்கி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன் பாரதியார் நகர் பகுதியில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன்பின், அங்கு நடைபாதை அமைக்கப்படவில்லை.
இதனால், நடைபாதைகள் பழுதடைந்துள்ளது. எனவே, நடைபாதைகளை சீரமைக்க வேண்டும். தோப்லைன் பகுதியில் தடுப்பு சுவர்கள் அமைக்க வேண்டும்.
எனது வார்டு எண் 8 ல் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என இன்று நடைபெற்ற மாதந்திர நகரமன்ற கூட்டத்தில் மக்கள் நலன் கருதி பல்வேறு கோரிக்கைகளை நகரமன்ற உறுப்பினர் லயலோகுமார் முன்வைத்தார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக