மரியன்னை உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு:
கோத்தகிரி நகரில் உள்ள டவுன் ஸ்கூல் எனப்படும் புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு விக்டர் சகாயராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே ஜே ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். அவர் கூறிய கருத்துக்கள் -
ஐக்கிய நாடுகள் சபை இந்த ஆண்டினை குவாண்டம் இயற்பியல் ஆண்டாக அறிவித்துள்ளது. 1925 இல் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் முதன் முறையாக குவாண்டம் இயற்பியல் குறித்த கருத்துக்களை கூறினார். கடந்த நூறு ஆண்டுகளில் இந்த துறையில் மிகப் பெரும் அளவிலான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் இந்த ஆண்டு முழுவதும் குவாண்டம் அறிவியல் ஆண்டாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நமது பூமி மற்றும் சூரியனை சுற்றி வரும் இதர கோள்கள் அவற்றின் நிலாக்கள், பால் வெளி மண்டலம், மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள சுமார் 70 ஆயிரம் கேலக்ஸிகள் புகழ்பெற்ற விஞ்ஞானி நியூட்டன் கண்டுபிடித்த விதிகளின்படி ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த இயக்கத்தை வரையறுக்கும் இயற்பியல் கிளாசிக்கல் பிசிக்ஸ் எனப்படும். ஆனால் ஒரு அணுவிற்குள் இது போன்ற ஒரு உலகம் இருப்பதை அறிவியல் கண்டறிந்து உள்ளது. அணுவை பிளக்கும் போது அதனுள் எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான் போன்ற துகள்கள் காணப்பட்டன. புரோட்டான் நியூட்ரான்களை பிளக்கும் போது அதனுள் குவார்ட்ஸ் என்ற 54 வகையான துகள்கள் காணப்பட்டது. சப் அடாமிக் பார்ட்டிகள் எனப்படும் இத்தகைய அணுத்துகள்கள் 150 க்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஹிட்ஸ் ஹிக்ஸ் போஸான் எனப்படும் கடவுள் துகள் உட்பட ஏராளமான துகள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தத் துகள்களின் கண்டுபிடிப்புக்கு மட்டும் 20 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. பிரபஞ்சத்தில் கோள்களுக்கு இடையே செயல்படும் இயக்க விசைகள் அணுவிற்குள் செயல்படுவதில்லை. அணுத்துகள்களுக்கு இடையே செயல்படும் இயக்க விசையை குவாண்டம் விசைகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த குவாண்டம் இயக்கத்தை பயன்படுத்தி அதிநவீன குவாண்டம் கம்ப்யூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சாதாரணமாக உள்ள கம்ப்யூட்டர் 2000 வருடத்தில் செய்யும் ஒரு வேலையை குவாண்டம் கம்ப்யூட்டர் 100 வினாடியில் செய்து முடிக்கும் வல்லமை பெற்றது. தற்போது google நிறுவனத்தின் குவாண்டம் கம்ப்யூட்டர் நமது சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி சுந்தர் பிச்சை நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் போன்ற நவீன தொழில்நுட்பங்களை கடந்து அடுத்த நவீன தொழில்நுட்பமாக குவாண்டம் மெக்கானிசம் வளர்ந்து வருகிறது. அண்மையில் ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் இந்த தொழில்நுட்பத்தை ஆந்திராவில் கொண்டுவர 4000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. நமது தமிழக அரசும் இந்த புதிய தொழில்நுட்பத்தில் எந்த வகையிலும் பின்தங்கி விடாமல் இருக்க உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மாணவர்களும் அடுத்த தலைமுறை தொழில் நுட்பமான குவாண்டம் தொழில்நுட்பத்தை பற்றிய தகவல் களை அறிந்து கொள்ள வேண்டும். போட்டிகள் நிறைந்த வருங்கால உலகில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்க கல்வித்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற பல கருத்துக்களை ஆசிரியர் ராஜு கூறினார் முன்னதாக அறிவியல் ஆசிரியர் ரிச்சர்ட அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் தேவ பக்தன் நன்றி கூறினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக