உலக சுற்றுச்சூழல் தினம் "ECO – NURTURERS OF TAMIL NADU" என்னும் தலைப்பில், ஆக்சிலியம் கல்லூரயில் புத்தகம் வெளியீடு!
காட்பாடி , ஜூன் 5 -
வேலூர் மாவட்டம் காட்பாடி அசலியும் கல்லூரியில் சுற்றுச்சூழல் நன்மைக்காக போராடும் தமிழகம் தழுவிய சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் 20 பேரின் வாழ்க்கை குறிப்பை "ECO – NURTURERS OF TAMIL NADU" என்னும் தலைப்பில், ஆக்சிலியம் கல்லூரி பேராசிரியர்கள் புத்தகமாக தொகுத்துள்ளனர். உலக சுற்றுச்சூழல் தினமான இன்று வேலூர் காட்பாடி ஆக்சிலியம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலர் முனைவர் மேரி ஜோஸ்பின் ராணி, கல்லூரி முதல்வர் முனைவர் ஆரோக்கிய ஜெயசீலி இருவரும் வெளியிட அதனை பெற்றுக் கொண்டேன். உடன் பேராசி ரியர் இசபெல்லா உடன் இருந்தனர்.
இந்தப் புத்தகத்தில் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் அவர்களுடைய வாழ்க்கை குறிப்பும் இடம் பெற்றுள்ளது தினேஷ் சரவணன் கூறுகையில் மகிழ்ச்சி அளிக்கிறது. என்றும் ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் என்னுடைய நன்றி தெரிவித்தார்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக