புதிய நீதிக் கட்சியின் நகர செயலாளரும் கைத்தறி காவலனுமான ரமேஷ் இல்லத் திருமண விழாவின் தொடர்ச்சியாக வரவேற்பு விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 ஜூன், 2025

புதிய நீதிக் கட்சியின் நகர செயலாளரும் கைத்தறி காவலனுமான ரமேஷ் இல்லத் திருமண விழாவின் தொடர்ச்சியாக வரவேற்பு விழா!

 புதிய நீதிக் கட்சியின் நகர செயலாளரும் கைத்தறி காவலனுமான ரமேஷ் இல்லத் திருமண விழாவின் தொடர்ச்சியாக வரவேற்பு விழா!
குடியாத்தம் , ஜூன் 5 -

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, பிச்சனூர் பேட்டை, குடியாத்தம் புதிய நீதிக் கட்சியின் நகர செயலாளரும், கைத்தறி காவலனுமான ரமேஷ் இல்லத் திருமண விழாவின் தொடர்ச்சியாக வரவேற்பு விழா, குடியாத்தம் நகர செயலாளர் கைத்தறி காவலனுமான எஸ்.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலை வர், ஏ.சி.எஸ் குழுமம், நெசவாளர்களின் பாதுகாவலர் கொடைவள்ளல் டாக்டர். ஏ.சி.சண்முகம் அவர்கள் நல்லாசியுடன்
 புதிய நீதிக் கட்சியின் செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், துணை பொதுச் செயலா ளர்  ஏ.சி.எஸ் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி னர். இதில் சிறப்பு விருந்தினர்களாக புதிய நீதிக் கட்சியின் மண்டல செயலா ளர் சரவணன், மாவட்ட செயலாளர் செந்தில், நகர ஏ.சி.எஸ் பேரவை செயலா ளர் சசிகுமார், நகரப் பொறுப்பாளர்கள் வெங்கடேசன், கன்னியப்பன், ஹரிஷ் குமார், எஸ்.பி.நந்தகுமார், வினோத் குமார், மோகன், சிவகுமார், விஜய், மகளிர் அணியினர் உமா மகேஸ்வரி, சங்கீதா, நித்யா, கல்பனா மற்றும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் என திரளானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad