திருப்பத்தூர் to பாண்டிச்சேரி வரை இரண்டு மஞ்சள் நிற பேருந்தை கொடி அசைத்து துவக்கி வைத்த எம் எல் ஏ நல்லதம்பி!
திருப்பத்தூர் , ஜூன் 22 -
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரி லிருந்து புதுச்சேரி வரை செல்லக்கூடிய விழுப்புரம் கோட்டம் கழகம் அரசு போக்கு வரத்திற்குட்பட்டபச்சநிறம் கொண்ட BS6 என்ற அரசு பேருந்து புதுப்பிக்கப்பட்டு மஞ்சள் நிறம் பேருந்தை திருப்பத்தூர் போக்குவரத்து பணிமனை பி.எம். குமரன் தலைமையில் இன்று திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பத் தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த இரண்டு பேருந்துகளும் திருவண்ணா மலை பேருந்து நிலையம் சென்று அதன் பிறகு பாண்டிச்சேரி செல்ல உள்ளது.
இந்த நிகழ்வின்போது தொழிலாளி முன்னேற்ற கழகம் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளிகள் பொதுமக்கள் திமுக பொதுக்குழு உறுப்பினர் அரசு ஜீவிதா பார்த்திபன் நகர மன்ற உறுப்பினர் பிரேம் குமார் ஐ டிவி நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக