நாசரேத் திருமண்டலத்தின் பேராயர் மற்றும் பிரதமபேராயரின் ஆணையாளராக கோயம்புத்தூர் திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர் இன்று 07.07.2025 பொறுப்பு ஏற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஜூலை, 2025

நாசரேத் திருமண்டலத்தின் பேராயர் மற்றும் பிரதமபேராயரின் ஆணையாளராக கோயம்புத்தூர் திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர் இன்று 07.07.2025 பொறுப்பு ஏற்பு.

தென்னிந்திய திருச்சபையின் பொறுப்பு பிரதம பேராயர் மற்றும் உதவி பிரதம பேராயரின் 05.07.2025 தேதியிட்ட ஆணையின்படி தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் பேராயர் மற்றும் பிரதமபேராயரின் ஆணையாளராக கோயம்புத்தூர் திருமண்டல பேராயர் அருள்பெருந்திரு. திமோத்தி ரவீந்தர் இன்று 07.07.2025 இன்று காலை 10 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். 
இந்நிகழ்வில் திருச்சபை மக்கள், குருவானவர்கள், திருமண்டல அலுவக பணியாளர்கள், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள், சினாடு பெருமன்ற உறுப்பினர்கள் இந்த பிரதமபேராயரின் ஆணையாளர் பொறுப்பேற்கும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்று வாழ்த்து கூறினார்கள். 

பிரதம பேரயரின் ஆணையாளர் திமோத்தி ரவீந்தர் அவர்கள் பொறுப்பேற்றவுடன் கடந்த நாட்களின் கடினமான சூழல்கள் நம்மை நடத்தின கடவுள் இந்த புதிய எனது பணிக்காலத்தை ஆசீர்வாதமாக்கி தருவார் என்ற நம்பிக்கையோடு, இணைந்து பணியாற்றுவோம் வாருங்கள் என்று உரையாற்றினார். 

தென்னிந்திய திருச்சபையின் பொறுப்பு பிரதம பேராயரோடு ஆலோசித்தபின்பு புதிய தேர்தல் கால ஒழுங்குகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad