திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இன்று (07.07.2025) திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஜூலை, 2025

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இன்று (07.07.2025) திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இன்று (07.07.2025) திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவை முன்னிட்டு காலை 6.22 மணிக்கு மூலவர், ராஜகோபுரம், சண்முகர், கிழக்கு வாசல் கோபுரம் உள்ளிட்ட விமானக் கலசங்களின் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பூனித நீர் ஊற்றப்பட்டு, திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன்,

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குநர் / சிறப்பு அலுவலர் ப.மதுசூதன் ரெட்டி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.பி.என்.ஸ்ரீதர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் சி.பழனி, 

பேரூராட்சிகளின் இயக்குநர் / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மா.பிரதீப்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், கூடுதல் காவல்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம், தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேம் ஆனந்த் சின்கா, 

திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் தசந்தோஷ் ஹடிமணி,
மதுரை சரக காவல் துறை துணைத் தலைவர் முனைவர் அபிநவ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், உட்பட 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, கூடுதல் ஆணையர் பொ. ஜெயராமன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவராக பூச்சி எஸ்.முருகன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தக்கார் ஆர். அருள்முருகள், இணை ஆணையர் ஞானசேகரன், திருக்கோயில் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad