தேனாடு: வீட்டின் கதவையில் உடைத்த கரடியால் பொதுமக்களிடம் பெரும் பீதி!
நீலகிரி மாவட்டம் தேனாடு ஊராட்சி தேனாடு அட்டியில் உள்ள ஓர் குடியிருப்பில் அதிகாலை நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம், உள்ளூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வீடு ஒன்றின் கதவை அடியில் உடைத்து உள்ளே நுழைந்த கரடி, அங்கு இருந்த பொருட்களை தூக்கி வீசியது.
எப்படி உள்ளே நுழைந்தது கரடி?
அதிகாலை 3 மணி அளவில், வீட்டின் வாசலில் உணவுக்கு மணம் வந்ததாக கருதப்படும் கரடி, வீட்டு கதவின் மரப்பலகையை தள்ளிச் சிதைத்து, உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.
பொதுமக்களில் அச்சம்:
இது இந்த பகுதியில் நடக்கிற முதல் சம்பவம் அல்ல. கடந்த சில வாரங்களாகவே தேனாடு மற்றும் சுற்றுப்புறங்களில் கரடிகள் தொடர்ந்து சுற்றித் திரிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க, வனத்துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் மிகுதியானது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக