தமிழகத்தில் கடந்த வாரம் மீன் பிடித் தடைக்காலம் முடிவுக்கு வந்த தையடுத்து ஈரோடு மீன் மார்கெட்டுக்கு கடந்த வாரம் முதல் மீன்கள் வரத்து அதிகரித்து உள்ளது. அதே நேரம் தற்போது கேரளத்தில் மீன் பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால் அங்கிருந்து குறைந்த அளவிலான மீன்களே விற்பனைக்கு வந்திருந்தன.
குறிப்பாக மத்தி மீன் மட்டுமே
வந்திருந்தது. இதனால், கடந்த
வாரம் சுமார் 18 டன் மீன்கள்
வந்திருந்த நிலையில், இந்தவாரம்
சுமார் 12 டன் அளவில் மட்டுமே
மீன்கள் விற்பனைக்கு கொண்டு
வரப்பட்டிருந்தன. ஆனால், மீன்களின்
விலையில் எந்த மாற்றமும் இல்லை.
அதன்படி, நேற்று (ஜூலை 6)
ஈரோடு மார்க்கெட்டில் விற்பனை
செய்யப்பட்ட மீன்களின் விலை விவரம்
(கிலோவுக்கு) வருமாறு வஞ்சரம் - ரூ.
1, 500, கருப்பு வாவல் - ரூ. 850, கடல்
கொடுவா - ரூ. 850, சீலா ரூ. 700, பெரிய
இறால் - ரூ. 550, மயில் - ரூ. 700, கிளி
-ரூ.500, விளாமீன் - ரூ.650, தேங்காய் பாறை - ரூ. 550, சின்ன இறால் - ரூ.
400, திருக்கை - ரூ. 450, கனவா .
400, முரல் - ரூ. 400, சங்கரா - ரூ. 400, அயிலை - ரூ. 250, மத்தி - ரூ. 380.
குமார், பவானி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக