ரயில்வே நுழைவு பாலத்தில் போக்குவரத்து துவக்கம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஜூலை, 2025

ரயில்வே நுழைவு பாலத்தில் போக்குவரத்து துவக்கம்

ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் மழைநீர் வடிகால் சேதமடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டனர். இதையடுத்து ரயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நுழைவு பாலத்தின் சாலையை சீரமைக்கும் பணி துவங்கியது. இதற்காக, நாடார்மேடு பகுதியில் இருந்து காளைமாட்டு சிலை நோக்கி வரும் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த வாகனங்கள் லெனின் வீதி, சாஸ்திரிநகர், காசிபாளையம், சென்னிமலைரோடு வழியாக திருப்பி விடப்பட்டன. இந்தநிலையில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் முதல் கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் ம. சந்தானம், ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad