திருமங்கலம் அருகே சகதியில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை.இரவு முழுவதும் கிராமத்தில் பரபரப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஜூலை, 2025

திருமங்கலம் அருகே சகதியில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை.இரவு முழுவதும் கிராமத்தில் பரபரப்பு.

 


திருமங்கலம் அருகே  சகதியில் சிக்கிய இரண்டரை வயது குழந்தை.இரவு முழுவதும் கிராமத்தில் பரபரப்பு.



மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகானி கிராமத்தை சார்ந்த கிருஷ்ணன் (31) நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.இவரது மனைவி சுவாதி இவர்களுடைய மகன் ஆதிஸ்குமார் (இரண்டரை வயது)வீட்டு முன்பு விளையாடி கொண்டு இருந்தது.திடிரென மாயமான குழந்தைய காணவில்லை அக்கம்பக்கத்தில் விசாரித்தும் இரவு முழுவதும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.உடனடியாக போலீஸ்க்கு தகவல் அளித்தனர்.வழக்கு பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர்.இந்நிலையில் கிருஷ்ணன் வீட்டில் இருந்து அரை கி.மீ.தொலைவில் ஊரையொட்டி ஒரு ஊரணி உள்ளது.ஊரணி பகுதிக்கு சென்று பார்த்தனர் அங்கே சகதியில் குழந்தை ஆதிஸ்குமார் சிக்கி  அழுது கொண்டு இருந்தது. உடனடியாக குழந்தையை மீட்டு தந்தை கிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை நடந்தே சென்றதா அல்லது யாரும் அழைத்துச் சென்றார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த கிராமத்தில் இரவு முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad