காரமடை அருகே பால் வியாபாரி வெட்டி படுகொலை!!!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஜூலை, 2025

காரமடை அருகே பால் வியாபாரி வெட்டி படுகொலை!!!!


காரமடை அருகே பால் வியாபாரி வெட்டி படுகொலை!!!!


கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஆயர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பால் வியாபாரி சுந்தர்ராஜ் இவருக்கு ருக்மணி என்ற மனைவியும் சஞ்சய் குமார் 23 என்ற மகனும் ஷாலினி 22 மகளும் உள்ளனர்.ஷாலினி திருமணம் ஆகி தனியே வசித்து வருகிறார் .தந்தையுடன் சேர்ந்து சஞ்சீவ் குமாரும் பால் கறந்து விற்பனை செய்து வருகின்றனர் சஞ்சய் குமார் நேற்று இரவு தூங்க சென்றார். இன்று அதிகாலை அவரது அம்மா சஞ்சய் குமாரை எழுப்பச் சென்றார். கதவு திறந்தே கிடந்ததை பார்த்து அவர் வீட்டினுள் சென்று பார்த்த போது வெட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது தெரியவந்தது, தகவல் அறிந்து டிஎஸ்பி அதியமான் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .மேலும் சம்பவ  நடந்த இடத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள், மற்றும் மோப்பநாய் வீரா அழைத்துவரப்பட்டது இந்த கொலை சம்பவம் பகுதி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad