கோவை கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 1308 மாணவ மாணவியர்கள் பட்டங்களை பெற்றனர்..
கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் கே ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது கல்லூரியில் 16வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி கல்லூரி விழா அரங்கில் நடைபெற்றது .கல்லூரியில் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவச்சலம் பட்டமளிப்பு விழா வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் முதல்வர் ரத்தினமாலா ஆண்டறிக்கை வாசித்து பட்டங்களை பெறும் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினர்.தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மணிப்பால் குழுமத்தின் பெரு நிறுவன வளர்ச்சித் துறையின் முன்னாள் துணைத் தலைவர் நவநீதகிருஷ்ணன் சங்கர் ஐயா , மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். 1,179இளங்கலை மாணவர்களும் 129 முதுகலை மாணவர்களும் என மொத்தம் 1,308 மாணவ மாணவியர்கள் பட்டங்களை பெற்றனர் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக