“உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ், நாளை (16.07.2025) தூத்துக்குடி மாவட்டத்தில் முகாம் நடைபெறும் இடங்களின் விவரங்கள் பின்வருமாறு :-
உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் முகாம் நடைபெறும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு உரிய அலுவலர்களிடம் மனு அளித்து பயன்பெறலாம். மேலும், இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக