நாசரேத் சாலமோன் பள்ளியில் காமராஜரின் 123வது பிறந்த நாள் விழா
ஜீலை 15, நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின் 123வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக புஷ்பம் அன் கோ உரிமையாளர் செந்தில் குமார் மற்றும் 3வது வார்டு கவன்சிலரும், காமராஜர் ஆதித்தனார் கழக மாவட்ட செயலாளருமான ஐஜின் குமார் கலந்து கொண்டனர். பள்ளி தலைவர் எலிசபெத் முன்னிலை வகித்தார்.
பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை குழந்தைகளுக்கு எடுத்துரைத்தார். மாணவி பானு மற்றும் பிரியதர்ஷினி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினர். பள்ளி கல்வி அமைச்சர் மாணவி சுபிக்ஷா மற்றும் பள்ளி உதவி கல்வி அமைச்சர் மாணவன் அர்ஜீன் தலைமை தாங்கினர்.
பள்ளி குழந்தைகள் காமராஜரின் வேடமணிந்து வந்திருந்தனர். குழந்தைகளுக்கு பேச்சுப் போட்டி மற்றும் நடனப் போட்டி, வில்லுப்பாட்டு நடைபெற்றது. காமராஜரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மாணவர்கள் நாடகமாக நடத்திக் காட்டினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளி உதவி முதல்வர் மாரிதங்கம் நன்றி உரை கூறினார். இந்த விழா ஏற்பாட்டினை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி விழா இனிதே நிறைவடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக