ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை தற்போது பச்சை பசேல் என செழித்து காணப்படுகிறது.
இந்த மலைப்பகுதியில் பல அபூர்வ மூலிகை மரங்களும் உள்ளன.
பர்கூர் மலைப்பகுதியில் ஏராளமான பலாப்பழம் மரங்கள் உள்ளன.
தற்போதைய சீசன் என்பதால் பலாப்பழம் அதிக அளவில் காய்தது கொண்டிருக்கிறது. இதன் வாசனையை மோப்பம் பிடித்து யானைகள் கூட்டமாகவோ, ஒற்றை யானையாகவோ வந்து பலாப்பழங்களை சாப்பிடும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியே வந்த ஒற்றை யானை ஒன்று பர்கூர் மலை வழியாக வந்து அங்கு சாலையோரம் இருந்த ஒரு பலாப்பழ மரத்தை பார்த்து தனது இரண்டு கால்களால் மரத்தின் மேலே வைத்து லாபகரமாக தனது துதிக்கையால் பலாப்பழத்தை பறித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அண்ணாதுரை, அந்தியூர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக