ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேகமூட்டம் சேர்ந்து பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிலையில் நேற்று (ஜூலை 6) மாலை ஆசனூரில் இருந்து அரேபாளையம் வழியாக கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் செல்லும் சாலையில் சாலை ஓரத்தில் இருந்த மரம் சாலையில் முறிந்து விழுந்ததால் தமழக - கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
மின்கம்பி மீது மரம் விழுந்ததால் கேர்மாளம், திங்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு மூங்கில் மரம் வெட்டி அகற்றப்பட்டது பின்னர் போக்குவரத்து மீண்டது. இதனால் அப்பகுதியில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பிரகாஷ், கோபி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக