சென்னிமலை அருகே தோட்டத்தில் புகுந்து நாயை கடித்து குதறிய சிறுத்தை கிராம மக்கள் பீதி சென்னிமலை அருகே தோட்டத்தில் கட்டியிருந்த நாயை சிறுத்தை கடித்து கொன்றதை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். சென்னிமலை அருகே வனப்பகுதியை ஒட்டி, சில்லாங்காட்டுவலசு, வெப்பிலி கிராமங்கள் உள்ளன. இங்குளள தோட்டங்களில் இரவு நேரத்தில் சிறுத்தை புகுந்து ஆடு, கன்றுக்குட்டிகள் மற்றும் நாய்களை கடித்து கொன்று வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், சிறுத்தையை உயிருடன் பிடிக்க கூண்டு வைத்து, வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இருப்பினும், கடந்த வாரம் வெப்பிலி பகுதியில் உள்ள தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, அங்கு கட்டியிருந்த நாயை கடித்துக் கொன்றது. இந்நிலையில், சில்லாங்காட்டுவலசு குழுவக்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி செல்லக்குட்டி (70). இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கால்நடைகளை தோட்டத்தில் கட்டி வைத்துவிட்டு, அங்கு நாயையும் கட்டி வைத்து விட்டு சென்றிருக்கிறார். பின்னர் நேற்று காலையில் செல்லக்குட்டி தனது தோட்டத்துக்கு சென்றுள்ளார். அங்கு கட்டப்பட்டிருந்த நாயை சிறுத்தை கடித்து கொன்று தின்று விட்டு, பாதி உடலை அங்கேயே போட்டு விட்டு சென்றது தெரியவந்தது.
நாகப்பன், பெருந்துறை.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக