தாராபுரத்தில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாத்தால் பொதுமக்கள் அவதி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஜூலை, 2025

தாராபுரத்தில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாத்தால் பொதுமக்கள் அவதி



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட எல்லீஸ் நகரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் அந்த பகுதியில்  சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் தாராபுரம்- பொள்ளாச்சி சாலை ஓரத்தில்  கழிவுநீர் தேங்கி நிற்கிறது.  மேலும் அங்கு பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு ஈக்கள்,கொசுக்கள் உற்பத்தியாகிறது.அதன் மூலம் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள்  கடைக்காரர்கள் மற்றும் அங்கு வரும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.சாக்கடை கழிவுநீரில்  இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாராபுரம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எல்லீஸ்நகர் பகுதியில் விரைவில் சாக்கடை கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad