பேரணாம்பட்டு அருகே கோர விபத்து 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலே பலி!
பேரணாம்பட்டு , ஜுலை 9
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே கோர விபத்து கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலி. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டுகுடியாத் தம் செல்லும் சாலையில் உள்ள கொண்ட மல்லி அருகே சாலையின் ஓரமாக அமை ந்துள்ள பம்ப் செட் சுவரின் மீது கர்நாடக மாநிலம் பதிவெண் கொண்ட கார் பலத்த சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது இதனை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் இது குறித்து பேர ணாம்பட்டு போலீசாருக்கு தகவல் கொடு த்தனர். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் ருக்மாங் கதன் சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோபிநாத், சரவணன் விபத்தில் சிக்கியிருந்தவர் களை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். விசார ணையில் பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள் என் பது தெரிய வந்துள்ளது. இதில் லெனின் (வயது20) என்பவர் காரை ஓட்டிவந்துள் ளார் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த பிலிப்பேடு (வயது21) ஆகிய இருவரும் அண்ணன் தம்பிகள்,சம்பவ இடத்திலே யே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் விபத்தில் பலத்த காயம் அடைந்த மாணவர்கள் சாரோன் (வயது20) டேவிட் ஜாக்சன் (வயது21) சுதீப் (வயது20) ஆகிய மூன்று மாணவர்களுக்கும் கை, கால் முறிவு ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்து வமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மாற்றப்பட்டனர். இந்த விபத்து குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அங்குள்ள இளைஞர் ஒருவர் கூறுகை யில் பேரணாம்பட்டு குடியாத்தம் செல் லும் சாலையில் கொண்ட மல்லி பகுதி யில் அதிகமான மாடுகள் சாலையின் நடுவே சுற்றி திரிவதாகவும் இதனால் அப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுவதாகவும் கூறினார். சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர்
ஜான் விஜயகுமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக