மத்திய மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கி ணைப்பு குழுவின் சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஜூலை, 2025

மத்திய மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கி ணைப்பு குழுவின் சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம்!

மத்திய மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கி ணைப்பு குழுவின் சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம்!
வேலூர் , ஜுலை ‌9 -

வேலூர் மாவட்டம் அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரித்து மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம  10 மணி அளவில் வேலூர் பிஎஸ்என்எல் சங்க அலுவலகம் எதிரில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத ஊழியர் விரோத கொள்கைகளை எதிர்த் து அகில இந்திய ஒரு நாள் வேலை நிறுத் த போராட்டத்தினை ஆதரித்து ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் எம் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார் , செயலாளர் பி. லோகநாதன் வரவேற்று பேசினார் தமிழ்நாடு அரசு அனனத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி கிருஷ்ண மூர்த்தி கண்டன உரையாற்றினார்.
 தமிழ் நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் மாவட்ட அமைப் பாளர் முனைவர் செ.நா. ஜனார்த்தனன், அகில இந்திய ஒருங்கிணைப்பு குழுவின் மாநில தலைவர் சி ஞானசேகரன் அனை த்து துறை ஓய்வூதியர் சங்கத்தின்மாவட்ட செயலாளர் பா ரவி ஒருங்கிணைப்பு குழு வில் மாவட்ட பொருளாளர் எ கதிர்அகமது மாவட்ட செயலாளர் பி முருகன் போக்கு வரத்து ஓய்வூதியர் சங்க மண்டல செய லாளர் என் கோவிந்தசாமி, காப்பீட்டுக் கழக ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலா ளர் கே குமார் தபால் துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ தாமோதரன் டி பிரபா சந்திரன் டி செந்தில் வேலன் ஆகியோர் விளக்க உரையாற்றினர்.
 மாவட்ட பொருளாளர் பி ஞானசேகரன் நன்றி கூறினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர் எம் எஸ் ஓய்வூதியர் சங்கம் அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பு தமிழ்நாடு மின்வா ரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு அகில இந்திய இன்சூரன்ஸ் பென்சனர்கள் சங்கம் பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கம் தர்ஷினி ரயில்வே ஓய்வூதியர் சங்கம் உள்ளிட்ட சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாக பங்கேற்று ஆர்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad