கூட்டுறவுத்துறை ரூபாய் 45 இலட்சம் கடன் வழங்கல் இன்று ஜூலை 21 அதிகரட்டி பகுதியில் அமைந்துள்ளது அதிகரட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் தலைமை வகித்தார். இதில் மூன்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய்- 45,00,000/-ம் கடனுதவி நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்களால் வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில் மகளிர் அனைவரும் சிறு, குறு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று கூட்டு வட்டி எனும் கொடுமையில் சிக்கி, தங்களது சுயமரியாதை மற்றும் உழைப்பை இழக்காமல் இருக்க வேண்டுமென்றால் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக மட்டுமே கடன் பெற வேண்டும் எனவும் அவ்வாறு பெற்ற கடனை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தி தங்களது பொருளாதார நலனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலாளர் திரு. மணிகண்டன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சரக மேற்பார்வையாளர்கள் திரு. முருகேசன், சங்க பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாநில ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக