கூடலூர் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட கண்காணிப்பு குழு கூட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 23 ஜூலை, 2025

கூடலூர் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட கண்காணிப்பு குழு கூட்டம்


 கூடலூர் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. 


பொதுவிநியோக திட்ட கண்காணிப்பு குழு தலைவரும் வருவாய் கோட்டாட்சியருமான குணசேகரன் தலைமை தாங்கினார் 


வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சரவணகுமார், கூடலூர் குடிமை பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் நடேசன், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


கூடலூர் வட்டாட்சியர் முத்துமாரி, பந்தலூர் வட்ட வழங்கல் அலுவலர் விஜயன், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சிக்கனுமான், கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் காளிமுத்து, மகேந்திர பூபதி, பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசும்போது 


குடிமை பொருட்கள் வாங்க கைரேகை வைப்பது தாமதமாகிறது. இதனை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாய விலை கடைகள் சொந்த கட்டிடங்களில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேசன் பொருட்கள் அனைத்து கார்டுகளுக்கும் கிடைக்கும் வகையில் விநியோகம் அதிகரிக்க வேண்டும். கே ஓய் சி புதுபிக்காத நபர்கள் பெயர் நீக்கம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன இவற்றை தவிர்க்க வேண்டும். புதிய ரேசன் கார்டுகள் விண்ணப்பித்து காத்திருபோருக்கு விரைவில் ரேசன் கார்டு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லையோர பகுதிகளுக்கு காலையில் பொருட்கள் அனுப்பும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்ணெண்ணெய் 15ம் தேதியில் இருந்து மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.


பதில் அளித்த வருவாய் கோட்டாச்சியர் குணசேகரன் பேசும்போது கைரேகை வைத்து பொருட்கள் வாங்குவதால் ஏற்படும் தாமதம் தவிர்க்க பைபர் கேபிள் இணைப்பு வழங்கவும் மாற்று நடவடிக்கை எடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நியாய விலை கடைகள் சொந்த கட்டிடம் கட்டி செயல்படுத்த நிலம் தேர்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் நிதி பெறப்பட்டு சொந்த கட்டிடம் கட்டப்படும். ரேசன் பொருட்களுக்கு கூடலூர் பந்தலூர் வட்டங்களுக்கு தமிழகத்திலேயே அதிக அளவாக 95 சதவீதம் வரை பொருட்கள் ஒதுக்கீடு செய்யபடுகிறது. சில நேரங்களில் பொருட்கள் வாங்காமல் இருப்பு இருப்பதால் கூடுதல் ஒதுக்கீடு பெற சிரமம் ஏற்படுகிறது. புதிய கார்டுகளை வழங்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளபட்டு வருகிறது. ஏப்ரல் வரை விண்ணப்பித்த  கார்டுகள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தகுதி உள்ளவர்களுக்கு புதிய கார்டுகள் வழங்கப்பட்டு  வருகிறது. ரேசன் கடைகளில் KYC விரைவில் புதுப்பித்து கொள்ளவேண்டும். பதிவு செய்யாமல் இருந்தால் பொருட்கள் நிறுத்தப்படும் ஆனால் பெயர் நீக்கம் செய்யப்படாது. ரேகை பதிவு ஆகவிட்டால் வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனு அளித்து கடிதம் பெற்று ரேசன் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம். 5 வயதுக்கு உட்பட்டவர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் கைரேகை பதிவாகாது. இவர்கள் மறு வாய்ப்பு வழங்கப்படும். மாநில எல்லையோர கடைகளுக்கு முன்பகுதியில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அளவில் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு பெறுவதால் தாமதம் ஏற்படுகிறது. 20ம் தேதியில் இருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.  கூட்டத்தில் வட்ட வழங்கல் அலுவலக பணியாளர்கள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad