திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மது இன்ஸ்டிடூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அன்டு ரிசர்ச் சென்டர் (எம்.ஐ.எம்.எஸ்) சார்பாக 6-வது தேசிய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் மாநாடு மரு.வெ.பரத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி T.சேகர், அமுதா, மாவட்ட கல்வி ஆய்வாளர் (ஓய்வு), மருத்துவர் சுபிதா, நேச்சுரோபதி., மருத்துவர். வைத்தியநாதன் உதவி ஆணையர், சுங்கம் மற்றும் மத்திய கலால் வரி (ஓய்வு)., மருத்துவர் ப.லக்ட்சயா, எம்.ஐ.எம்.எஸ் இயக்குநர் மதுரை, மரு.க.சேதுசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
மருத்துவர் ஆரோக்கியபழம் வரவேற்புரையாற்றினார்,
எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தைப் பற்றிய புதிய புத்தகம் நீதிபதி சேகர் அவர்களால் எம்.ஐ.எம்.எஸ், மாணவர்களின் சார்பாக வெளியிட, எம்.ஐ.எம்.எஸ் கல்வி நிறுவனத்தின் சேர்மன் மற்றும் தென்னிந்திய எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கத்தின் தலைவருமான மரு.வெ.பரத் பெற்றுக்கொண்டார்.
நீதிபதி சேகர் அவர்களுக்கும் மற்றும் திருமதி. அமுதா அவர்களுக்கும் அவர்களின் பொதுநல சேவையைப் பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இம்மாநாட்டில்
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் முடிவில் மரு.யூசப் மௌலானா மற்றும் மரு.ஆம்புரோஸ் ஆகியோர் நன்றியுரை கூறினர்.
பின்னர் மரு.வெ.பரத் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் :- மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எம்.ஐ.எம்.எஸ் கல்வி நிறுவனமானது கடந்த 7 வருடங்களாக எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தை மத்திய சுகாதாரத்துறையின் அனுமதியுடன் ஆராய்ச்சி செய்து வருகிறது.
கொரோனா தொற்று காலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தில் சிகிச்சையளித்தது மட்டுமில்லாமல், பொதுமக்களுக்கு இம்யூனிட்டி பூஸ்டரும் வழங்கப்பட்டு உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது மட்டுமில்லாமல் பல்வேறு விருதுகளை பெற்றது. இந்தியாவில் எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவத்தை சரியான பாதையில் எம்.ஐ.எம்.எஸ் எடுத்து செல்கிறது.
இந்த மருத்துவத்திற்கு மத்திய மாநில சுகாதாரத்துறையில் முறையான அங்கீகாரம் கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருப்போம். பக்கவிளைவுகள் இல்லாத எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவம் ஆராய்ச்சியோடு மட்டுமில்லாமல் முறையான அங்கீகாரம் கிடைத்தால் பல்வேறு மக்கள் பலனடையலாம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களின் கவனத்திற்கும் இந்த மருத்துவத்தை பற்றி எடுத்து கூறியிருக்கிறோம். விரைவாக இந்த மருத்துவத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறோம் என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக