காரைக்குடி ரோட்டரி சங்கம் நடத்திய போட்டிகளில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் வெற்றி
காரைக்குடி ரோட்டரி சங்கம் சாா்பில் கார்மேளா-2025 இளைஞர் திருவிழாப் போட்டிகள் 26.07.2025 முதல் 28.07.2025 வரை சத்குரு ஞானானந்தா மஹாலில் நடைபெற்றது.மௌன நாடகம்,நடனம்,சிகை அலங்காரம், உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்றனர்.சிகை அலங்காரப் போட்டியில் ஆங்கிலத்துறை முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவிகள் இன்ஃபேன்சியா,தீபஜோதி இரண்டாம் பரிசும், மௌன நாடகப் போட்டியில் வணிகவியல் துறை மாணவிகள் சார்மதி, ஸ்ருதி ஶ்ரீ, நர்கீஸ் பானு, வரலாற்றுத்துறை மாணவிகள் பிரின்சி மிஸ்டிகா,கன்னிகா, தொழில் நிர்வாகவியல் துறை மாணவி அகல்யா ஆகியோர் இரண்டாம் பரிசும் பெற்றுக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்தனர்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை நடத்திய பேச்சுப்போட்டியில் புவி அமைப்பியல் துறை மாணவி அபிநயா மூன்றாம் பரிசும், ரூபாய் இரண்டாயிரம் பரிசுத்தொகையும் பெற்றார். பரிசு பெற்ற மாணவர்களைக் கல்லூரி முதல்வர் முனைவர் வசந்தி, நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வமீனா, உறுப்பினர்கள் முனைவர் லட்சுமணக்குமார், பேராசிரியர் ஷர்மிளா உள்ளிட்டோர் வாழ்த்திப் பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக