மானாமதுரையில் 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்'- சுற்றுப்பயணம் மேற்கொண்ட மாண்புமிகு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான திரு எடப்பாடி க. பழனிசாமி அவர்களின் 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்கின்ற சுற்றுப்பயணமானது தமிழக முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஜூன் 30 ஆம் தேதி புதன்கிழமை மாலை 5 மணி அளவில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள தேவர் சிலை அருகில் 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்கின்ற சுற்றுப்பயணத்தை திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் மேற்கொண்டார்.
இதில் சிவகங்கை மாவட்ட கழக செயலாளரும், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான திரு பி. ஆர். செந்தில்நாதன் மற்றும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளரும், கழக அமைப்பு செயலாளருமான திரு ஏ. கே. சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
நடைபெற்ற இந்த சுற்றுப்பயண கூட்டத்தில் அஇஅதிமுக மானாமதுரை ஒன்றிய செயலாளர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். குணசேகரன் மற்றும் ஜெயபிரகாஷ், நகரச் செயலாளர் விஜி போஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மானாமதுரை அஇஅதிமுக சார்பாக முன்னாள் ஒன்றிய பெருந்தலைவரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளருமான திரு ஏ. சி. மாரிமுத்து, கழக வழக்கறிஞர் மனம்பாக்கி திரு இரா. சுரேஷ்பாபு, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பாக துணை செயலாளர் பாலமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் முன்னாள் முதல்வர் அவர்களுக்கு மகச்சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில, மாவட்ட, சட்டமன்ற, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி மற்றும் கிளைகளை சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள், சிவகங்கை மாவட்ட அஇஅதிமுக கட்சியின் வழக்கறிஞர் பிரிவு, எம்ஜிஆர் இளைஞர் அணி, விவசாய பிரிவு, மருத்துவ அணி, எம்ஜிஆர் மன்றம், அம்மா பேரவை, இளைஞர் அணி, இலக்கிய அணி, மீனவரணி, மாணவரணி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
இச்சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு ஊடகங்களை சேர்ந்த பத்திரிக்கையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் செய்தி சேகரிப்பிலும், காவல் துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக