நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் மானாமதுரை வீரவிதை வில்வித்தை அகாடமி மாணவர்கள் சாதனை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஜூலை, 2025

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் மானாமதுரை வீரவிதை வில்வித்தை அகாடமி மாணவர்கள் சாதனை.


 நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் மானாமதுரை வீரவிதை  வில்வித்தை அகாடமி மாணவர்கள் சாதனை.


நாமக்கல்லில் தனியார் பல்கலைக்கழகத்தில் ஆர்.ஜி.பி.ஐ சார்பாக தேசிய அளவிலான வில்வித்தை போட்டி 2025 நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையிலிருந்து பயிற்சியாளர் கலைவளர்மணி டாக்டர் கே. பெருமாள் அவர்களின் தலைமையிலான 'வீரவிதை  வில்வித்தை அகாடமி' மாணவர்கள் கலந்துகொண்டனர். மேலும் நடைபெற்ற இந்த வில்வித்தை போட்டியில் வீரவிதை வில்வித்தை அகாடமி சார்பாக கலந்து கொண்ட மாணவர்களில் 8 வயதுக்குட்பட்ட பிரிவில் கலை எழிலன் முதல் இடத்தையும், ஜெயமித்ரன் மூன்றாம் இடத்தையும், சுஷாந்த் மூன்றாம் இடத்தையும், 10 வயதுக்குட்பட்ட பிரிவில் பிரனிஷ் மற்றும் அதிரஞ்சன் இரண்டாம் இடத்தையும், பெண்கள் பிரிவில் தேசிகா ஸ்ரீ இரண்டாம் இடத்தையும், 12 வயதுக்குப்பட்ட பிரிவில் கிருத்திக் பில்லு மூன்றாம் இடத்தையும், 14 வயதுக்குட்பட்ட பிரிவில் நித்தின் மெஸ்ஸி, அருள்குமரன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் முதல் இடத்தையும் பெற்று அகாடமிக்கும், மானாமதுரைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். சாதனையை புரிவதும் பரிசுகள் பெறுவதும் வீரவிதை வில்வத்தை அகாடமிக்கு புதிதல்ல என்றாலும் கூட, நடந்து முடிந்த இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் வீரவிதை  வில்வித்தை அகாடமி நிர்வாகம் சார்பாக பாராட்டுக்களையும், வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad