வேலூரில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறு த்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 30 ஜூன், 2025

வேலூரில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறு த்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

 வேலூரில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் கள் 6 அம்ச  கோரிக்கைகளை வலியுறு த்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
வேலூர் , ஜூன் 30 -

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் எதிரில் நடைபெற்றது இன்றையஆர்ப்பாட்டத் திற்கு மாவட்ட தலைவர் ஆர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
 டி.ஜெயப்ரகாஷ் டீ மலர்விழி கே ஜி தேவி சி சுதாகர் ஜே சுந்தரம் வி திருக்குமரன் கே குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கே மஞ்சுளா வரவேற்பு பேசினார். இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினரும் தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தில் மாநிலத் தலைவருமான முனைவர் செ. நா. ஜனார்த்தனன் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டு கோரிக்கை களை விளக்கி பேசினார்.தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியில் மாவட்ட செயலாளர் ஆ ஜோசப் அன்னை யா தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் எம் எஸ் செல்வகுமார் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டிடி ஜோஷி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பி இ இளங்கோ தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் எம் ஸ்நேக லதா தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் எஸ் தீனதயாளன் உருது வழி ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலா ளர் முகமது ஷாநவாஸ் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் ஜி கோபி தமிழக தமிழாசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஜி சீனிவாசன் ததமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க முன்னாள் மாநில தலைவர் அ. சேகர் ஜாக்டோ செய்தி தொடர்பாளர் வாரா ஆகியோர் வாழ்த்து பேசினார் மாவட்ட நிர்வாகிகள் பாலச் சந்தர் வினோத்குமார் ஹரிகிருஷ்ணன் காதம்பரி நிர்மலா ராஜகுமாரி உள்ளிட்ட மாவட்ட கன்னி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கோரிக்கைகள்
 
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிவிட்டு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் 
 நிர்வாக மாறுதல் என்ற பெயரில் நடைபெறும் முறைகேட்டை தடுத்து நிறுத்த வேண்டும் 
 ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டம் ஏற்றப்பட வேண்டும் 
 பள்ளி வளாகத்தில் கத்துமீறி உள்ளே நுழைந்து அரியலூர் மாவட்டத்தில் தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த சமூக விரோதிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் 
 ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மற்றும் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவை பழைய முறையிலேயே தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் 
 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு உதவி பணியில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் அரசின் அனைத்து சலுகைகளும் வழங்கிட வேண்டும் 
 உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 60 பெண் ஆசிரியர்கள் உள்பட 200 ஆசிரியர்கள் பங்கேற்றனர் 
 முடிவில் மாவட்ட தலைமையிட செயலாளர் முனைவர் சி சுதாகர் நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad