பேரணாம்பட்டு நகராட்சியின் சார்பில் சமுதாய நாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி போடும் பணி துவக்கம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 ஜூலை, 2025

பேரணாம்பட்டு நகராட்சியின் சார்பில் சமுதாய நாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி போடும் பணி துவக்கம்!

பேரணாம்பட்டு நகராட்சியின் சார்பில் சமுதாய நாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி போடும் பணி துவக்கம்!
பேரணாம்பட்டு , ஜுலை 2 -

பேரணாம்பட்டு நகராட்சியின் சார்பில் சமுதாய நாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி போடும் பணி துவக்கம், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி 21 வார்டு கொண்ட நகராட்சியாகவும் இந்த நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் வீதிகள் மற்றும் சாலைகளில் நாய்கள் சுற்றி திரிகின்றன.அப்படி சுற்றித்திரியும் சில நாய்கள் வெறிப் பிடித்து பொதுமக்களை கடித்துகுதருகின் றன இதனை தடுக்கும் வகையில் தமிழ் நாடு அரசின் சார்பில் வேலூர்  மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் மற்றும் பேர ணாம்பட்டு நகராட்சி சார்பில் சமுதாய நாய்களுக்கான வெறி நோய் தடுப்பூசி போடும் பணிகள் முதல் கட்டமாக நேற்று துவங்கப்பட்டது.அதனை பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றி வேல் பேரணாம்பட்டு நகர மன்ற துணைத் தலைவரும் திமுக நகர செயலாளருமான ஆலியார் ஜுபேர் அஹ்மத் பேரணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் வேலவன் ஆகியோர் பார்வையிட்டுனர்.இதில் வார்டு கவுன்சிலர்கள் நகராட்சி எஸ் ஐ உமாசங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக குரல் சிறப்பு செய்தியாளர் விஜியகுமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad