ஏலகிரி மலையில் ஓட்சா கூட்டமைப்பு சார்பில் தூய்மை பணியாளர்களின் மாநாடு மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம்!
திருப்பத்தூர் , ஜுலை 6 -
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் ஓட்சா கூட்ட மைப்பு சார்பில் தமிழ்நாடு ஊரக வளர்ச் சித் துறையில் ஊராட்சிகளில் பணிபுரி யும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், சுகாதார ஊக்குனர்கள்,
ஓ எச் டி ஆப்பரேட்டர்கள், பரப்புரையாளர் கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள், மற்றும் பள்ளி தூய்மை பணியாளர்கள், ஆகியோரின் வாழ்வாதாரம் மேம்பட மாவட்ட மாநாடு மற்றும் மாநில பொது க்குழு கூட்டம் ஏலகிரி சுற்றுலா மைதான த்தில் நடைபெற்றது தலைமை எம் கண்ணன் அவர்கள் தலைமையில் இன்று ஏலகிரி மலையில் மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது
உடன் மாநில சங்கத்தின் செயல்பாடு களை குறித்து அறிக்கை வாசித்தல் பொதுச் செயலாளர் கிரிஷா இந்த நிகழ்ச்சி கலந்து கொண்டனர் சங்கத்தின் வரவு செலவு வாசித்தார் சத்யா. மாநில பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை அனைத்தையும் கோரிக்கையாக நிறை வேற்றப்பட்டது மேலும் இதில் சிறப்பு விருந்தினராக ஓட்சா கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் அமல்ராஜ் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன். மற்றும் தூய்மை பணியாளர்கள் சிறப்பானவர்கள் அவர்களே இல்லையென்றால் இந்த நாட்டில் தூய்மை இல்லாம போய்விடும் தமிழ்நாடு இன்று வளர்ச்சி நோக்கி செல்கின்றது என்றால் தூய்மை பணியா ளர்கள் தான் முதல் காரணம் என ஊரா ட்சி மன்ற தலைவர் பேச்சு பின்பு தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்றித் தர வேண்டும் என முன் வைத்தனர்
அவ்வாறு தூய்மை காவலர் அனைவருக்கும் மாத ஊதியம் ரூபாய் 10000 அவரவர் வங்கி கணக்கி ற்கு நேரடியாக வழங்கிட வேண்டும்
மேலும் தூய்மை பணியாளர்கள் அனைவ ருக்கும் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும். சுகாதார ஊக்குனர்களுக்கு மாதாந்திர தொகுப்பு ஊதியம் ரூபாய் ஐந்தாயிரம் வழங்கிட வேண்டும் மற்றும்
பேரூராட்சிகள் நகராட்சிகள் மாநகராட் சிகள் மற்றும் பெரு மாநகராட்சிகளில் பணியாற்றும் பரப்புரையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை பேரூராட்சிகள் நகரா ட்சிகள் மாநகராட்சிகள் மற்றும் பெரு மாநகராட்சிகளின் மூலம் அவரவர் வங்கி கணக்கிற்கு வழங்கிட வேண்டும் ஓஎச் டி ஆப்பரேட்டர்கள் காலம் வரை ஊதியம் வழங்கிட வேண்டும் மேலும் ரூபாய் 250 ஊதியம் பெரும் ஓஎச்டி ஆப்பரேட்டர் களை இணைய வழி மூலம் ஏற்றி ரூபாய் 4000 மாதந்தோறும் வழங்கிட வேண்டும்
மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊராட்சி பெண் சுகாதார தன்னால் அவர்களுக்கு மாதாந்திர ஊதி யத்தை ரூபாய் 10000 ஆக உயர்த்தி
வழங்கி பணி நிரந்தரம் செய்யவேண்டும் எனவும் மேலும் 2014 ஆம் ஆண்டு முதல் சுகாதார ஊக்குனர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தனி நபர் இல்ல கழிப்பறை களுக்கான ஊக்கத்தொகை ரூபாய் 300 வீதம் வழங்கிட வேண்டும் மேலும் பாதிக் கப்பட்ட ஊக்குனர்களை மீண்டும் பணி அமர்த்திட வேண்டும். பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு மாதம் ரூபாய் 5000 வழங்கி பிரதி மாதம் 5ஆம் தேதிக்குள் அவரவர் வங்கி கணக்குகளில் வழங்கிட வேண்டும். சுகாதார உறுப்பினர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை உடன டியாக விடுவிக்க வேண்டும் என பல் வேறு வகையான கோரிக்கைகளை முன் வைத்தார்கள் மேலும் உள்ளாட்சி அமை ப்புகளில் பணிபுரியும் சுமாரா 60000 கும் மேற்பட்ட உறுப்பினர்களின் உரிமைக ளை மீட் கொடுத்த ஓட்சா ஊராட்சி பணியாளர்கள் சங்கம் மாநில பொதுக் குழு கூட்டத்தில் நிலையான வாழ்வாதார த்தை ஏற்படுத்தி தர முடிவு செய்துள்ளது
இப்பொதுகுழுவில் மாவட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து தூய்மை பணியா ளர்கள் ஆன ஆண்களும் பெண்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக