குறிஞ்சிப்பாடி ஸ்ரீ புத்துமாரியம்மன் திருகோயில் மகா கும்பாபிஷேக விழா; வழிபாடு செய்த வேளாண் துறை அமைச்சர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 ஜூலை, 2025

குறிஞ்சிப்பாடி ஸ்ரீ புத்துமாரியம்மன் திருகோயில் மகா கும்பாபிஷேக விழா; வழிபாடு செய்த வேளாண் துறை அமைச்சர்.


கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ புத்துமாரியம்மன் திருகோயில் அமைந்துள்ளது. இத் திருகோயில் மகா கும்பாபிஷேகம் நாளை 7-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதனை முன்னிட்டு 4- ஆம் தேதி மங்கள இசையுடன் விக்னேஷ்வர பூசை, மகா கணபதி கோமம், நவக்கிரக கோமம், கோ பூசை உள்ளிட்ட மகா பூர்ணாகதி நடைபெற்று மகா தீபாராதனை காட்டபட்டது.


அதனை தொடந்து 5-ஆம் தேதி மாலை, முதல் கால பூசையும், 6-ஆம் காலை வசேஷ சாந்தி, வி த பாராயணம், நவ சக்தி அர்ச்சனையும் மகா தீபாராதனை காட்டபட்டு இரண்டாம் கால பூசை நடைபெற்றது. இந்த இரண்டாம் கால பூசையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இரண்டாம் கால வேல்வியில் கலந்து கொண்ட அமைச்சருக்கு சிவாச்சாரியார்கள் பரிவட்டம் கட்டினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad