ரெப்கோ வங்கி, வேலூர் கிளை தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஜூலை, 2025

ரெப்கோ வங்கி, வேலூர் கிளை தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா!

ரெப்கோ வங்கி, வேலூர் கிளை தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா!
வேலூர் , ஜுலை 7 -

வேலூர் மாவட்டம், அண்ணா சாலை, டார்லிங் ரெசிடென்சி கூட்டரங்கில், ரெப்கோ வங்கி, வேலூர் கிளை தாயகம் திரும்பியோர்  நல அறக்கட்டளை சார்பில் தாயகம் திரும்பிய மகளிருக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா வேலூர் டார்லிங் ரெசிடென்சியில் ரெப்கோ வங்கி தலைவரும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் இயக்குனருமான சந்தானம் தலைமை யில் நடைபெற்றது.    இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி தாயகம் திரும்பிய மகளிருககு நலதிட்ட உதவிகள், கல்வி உதவித்தொகை, மருத் துவ உதவித்தொகை, ஒற்றை பெற்றோர் அல்லது பெற்றோர் அல்லாத குழந்தை களின் படிப்பு செலவை வங்கிய ஏற்கும் என பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரில் உரையாடி, பேரு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்நிகழ்வின்போது வேலூர் கிளை ரெப்கோ வங்கி ஏ.ஜி‌.எம். விக்னே ஷ்வரி, உதவி மேலாளர்கள், ஹரிஹர சுதா, நரேஷ், ரெப்கோ ஹோம் பைனா ன்ஸ் மண்டல மேலாளர் காதர்பாஷா, ரெப்கோ வங்கி பேரவை பிரதிநிதி இளங்கோவன், வங்கி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ரெப்கோ உறுப்பி னர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு ஆலோசனைகள் வழங்க ப்பட்டு குறைகளின் பெயரில் மனு பெற்று அவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் உதவிகள் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இத்திட்டத்தின் மூலமாக 73பேர் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது. இறுதியில் ரெப்கோ வங்கி அலுவலர் சதீஷ் நன்றியயுரை யாற்றி விழா நிறைவுபெற்றது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad