மாபெரும் இலவச மருத்துவ முகாம்
யுனைடெட் செவிலியர் கல்லூரி மற்றும் யுனைடெட் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரி மற்றும் டாக்டர் விவேக் ராதாகிருஷ்ணன் எம்.டீ(யுஎஸ்ஏ) அவர்கள் இணைந்து நடத்தும் இலவசம் மருத்துவ முகாம் ஆனது இன்று 5-0 7- 2025 சனிக்கிழமை கேத்தி கிராமத்தில் முன்னாள் ராஜ்யசபா எம்.பி கே. ஆர் அர்ஜுனன் மற்றும் அவருடைய சகோதரர் ஆல்துரை மற்றும் ஊர் தலைவர்கள் முன்னிலையில் இனிதே துவங்கின. இதில் ஏராளமான பொதுமக்கள் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, உடல் பருமன் பரிசோதனை போன்ற மருத்துவ ஆலோசனைகளை மருத்துவ நிபுணர்கள் மூலம் ஆலோசனை பெற்று பயன் பெற்றனர் இந்நிகழ்வில் கேத்தி கிராமம் மற்றும் அனைத்து பகுதிகளிலிருந்து ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப மருத்துவ முகாம் இனிதே நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என். வினோத்குமார் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக