திருச்செந்தூர் ஒன்றியம் பிச்சிவிளையில்........ உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஜூலை, 2025

திருச்செந்தூர் ஒன்றியம் பிச்சிவிளையில்........ உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

திருச்செந்தூர் ஒன்றியம் பிச்சிவிளையில்........ உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு ....... 
.... 

அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இந்த திட்டத்துக்கான முகாம்கள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றியம் பிச்சிவிளை மகாலட்சுமி தங்கராஜ் நாடார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் இன்று நடைபெற்றது 

இந்த முகாமை மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதில் திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ஏபி ரமேஷ், திருச்செந்தூர் நகர திமுக செயலாளர் வாள் ஆர் சுடலை , 

உடன்குடி ஒன்றிய திமுக செயலாளர்கள் பாலசிங், இளங்கோ, மேல திருச்செந்தூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மகாராஜா, திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய பிடிஒ ஆன்றோ பிச்சிவிளை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ராஜேஸ்வரி, அரசு வழக்கறிஞர் சாத்ரக், பிச்சிவிளை திமுக கிளைச் செயலாளர் எட்வின், நாள் முடி சூடும் பெருமாள், இசக்கிமுத்து மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தமிழர் குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad