திருப்புளிங்குடி சுவாமிகாய்சினவேந்தன் கோவிலில் கருடசேவை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஜூலை, 2025

திருப்புளிங்குடி சுவாமிகாய்சினவேந்தன் கோவிலில் கருடசேவை.

திருப்புளிங்குடி சுவாமிகாய்சினவேந்தன் கோவிலில் கருடசேவை. 

ஸ்ரீவைகுண்டம் ஜூலை 14. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள நவதிருப்பதி களில் மூன்றாவதான திருப்புளிங்குடி சுவாமிகாய்சினவேந்தன் கோவிலில் நேற்று கருடசேவை நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

அதனை முன்னிட்டு மாலை 6 மணிக்கு சாயரட்சை. 6.15 மணிக்கு வாகன மண்டபத்திற்குஉற்சவர் சுவாமி காய்சினவேந்தன் எழுந்தருளி கருட வாகனத்தில் அலங்காரம் செய்து இரவு 8 மணிக்கு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாட வீதி. ரதவீதி வலம் வந்து 9.15 மணிக்கு சன்னதிக்கு வந்தடைந்தார். பின்னர் பல்லக்கில் எதாஸ்தானம் சேர்ந்தார். 

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ். சௌந்தரராஜன். கோபாலகிருஷ்ணன். காசினி வேந்தன். ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். தேவராஜன். கண்ணன். ஸ்ரீவேங்கடகிருஷ்ணன். செயல் அதிகாரி கோவல மணிகண்டன். ஆய்வாளர் நம்பி. அறங்காவலர் குழுத் தலைவர் அருணாதேவி கொம்பையா 

உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் லட்சுமி பேக்கரி முருகன். முத்துகிருஷ்ணன். செந்தில். திருக்கோயில் பணியாளர்கள் இசக்கி பாண்டி. ராஜு. வேணுகோபாலன் கைங்கர்ய சபா (டி வி எஸ்)களப் பணியாளர் பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad