ஈரோடு திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில், ரூ. 30 கோடி மதிப்பில், 186 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படவுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஈரோட்டில் பிரசித்தி பெற்ற தண்டல் வேலாயுதசுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலுக்கு ஆண்டு முழுவதும் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசித்து செல்வார்கள். ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, வேலாயுதசுவாமி கோயிலில் உயரமான முருகன் சிலை அமைக்க வேண்டும் என அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்.
அதன் அடிப்படையில், இந்து
சமய அறநிலையத்துறையின்
மானியக் கோரிக்கையில், திண்டல்
வேலாயுதசுவாமி கோயிலில் ரூ. 30
கோடி மதிப்பில், புதியதாக 186 அடி
உயர முருகன் சிலை மற்றும் ரூ. 1.90
கோடி மதிப்பில், மலைப்பாதைக்கு
செல்வதற்கு புதியதாக படி
வழிப்பாதை அமைக்கப்படும்
என அறிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, கோயிலில்
186 அடி உயர முருகன் சிலை
அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள்
துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக