ஆம்புலன்ஸ் கூட எமர்ஜென்சிக்கு செல்ல முடியாத பாதையாக உள்ள தீட்டுக்கள் ரோடு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 ஜூலை, 2025

ஆம்புலன்ஸ் கூட எமர்ஜென்சிக்கு செல்ல முடியாத பாதையாக உள்ள தீட்டுக்கள் ரோடு

 


ஆம்புலன்ஸ் கூட எமர்ஜென்சிக்கு செல்ல முடியாத பாதையாக உள்ள தீட்டுக்கள் ரோடு உள்ளது இந்த வழியாக தினமும் நகராட்சி சேர்மன் நகராட்சி எச் எம் ஓ ஹெல்த் இன்ஸ்பெக்டர். மற்றும் கமிஷனர்  இந்த ரோட்டில் தீட்டுக்கள் பகுதியில் உள்ள குப்பை கிடங்குக்கு சென்று வருகின்றார்கள். 


இந்த ரோட்டில் செல்லும் இவர்கள் எந்தவித வசதியும் இல்லாமல் முதியோர்கள்,பள்ளி குழந்தைகள் உடல் நல சரியில்லாத பொதுமக்கள். அவ்வழியாக நடக்கவோ வாகனத்தில் செல்லவோ முடியாத மிகவும் மோசமான ரோடு அங்கு உள்ளது. 


தினமும் செல்லும் நகர மன்ற சேர்மன் வாணிஸ்வரி அவர்களும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் எம் எஸ் ஓ அவர்களும் நகராட்சியில் உள்ள சூப்பர்வைசர் அவர்களும் இந்த ரோட்டில் பள்ளி குழந்தைகளும் வயதானவர்களும் உடல்நிலை சரியில்லாதவர்களும் எப்படி செல்வார்கள் என்று உங்களுக்கு தெரியாதா. இதே போல் பல முக்கியமான ரோடுகளும் இப்படித்தான் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வரும்போது இங்கு நன்றாக ரோடுகள் உள்ளது போல  இரவோடு இரவாக சாலை போட்டு மிகவும் நன்றாக உள்ளது போல காட்சியளிக்க செய்கின்றார்கள். 


அவரும் ஊட்டி மிகவும் நன்றாக உள்ளது என்று இங்கு சீரமைக்கப்படும் பணிகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியை கூட ஒதுக்காமல் இருக்க காரணம்  இந்த இரவோடு இரவாக போடுகின்ற ரோடு ஷோ ரோடு ஆகும். இதற்கு யார் காரணம்  என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி கேட்கின்றார்கள். இந்த ரோடு எப்போது சீரமைக்கப்படும் என்று பொதுமக்கள் கேட்கின்றார்கள்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர்  தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad