வ.உ.சி பூங்கா சுற்றுச்சுவர் இடித்து விழுந்ததால் பரபரப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஜூலை, 2025

வ.உ.சி பூங்கா சுற்றுச்சுவர் இடித்து விழுந்ததால் பரபரப்பு


ஈரோட்டின் பிரதான பொழுதுபோக்கு பூங்காவாக வ.உ.சி பூங்கா உள்ளது. மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள இப்பூங்காவிற்கு தினசரி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் வந்து செல்கின்றனர். பூங்காவை சுற்றிலும் 10 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.


இந்நிலையில், பவானி நெடுஞ்சாலையோரத்தில், கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள பூங்காவின் சுற்றுச்சுவர் நேற்று அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது. பூங்காவை சுற்றிலும் ஏராளமான சிற்றுண்டி மற்றும் தள்ளுவண்டி கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், அதிகாலையில் இடிந்து விழுந்ததால், உயிர் சேதமும், அசம்பாவிதங்களும் தவிர்க்கப்பட்டன.


மேலும், போக்குவரத்து பாதிப்பும் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், சிற்றுண்டி மற்றும் தள்ளுவண்டி கடைகள் மட்டும் சேதமடைந்துள்ளன. வ.உ.சி பூங்காவின் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், அந்த சுற்றுச்சுவரில் சிறிது சிறிதாக விரிசல் ஏற்பட்டு, திடீரென இடிந்து விழுந்ததாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


ம.சந்தானம் 

ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad