குண்டடத்தில் முறையாக மின் கணக்கீடு செய்ய வலியுறுத்தி பா.ஜ.க ஆர்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஜூலை, 2025

குண்டடத்தில் முறையாக மின் கணக்கீடு செய்ய வலியுறுத்தி பா.ஜ.க ஆர்பாட்டம்


குண்டடம் மின்சார அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில்  மின்சார அலுவலகத்தால் 60 நாட்களுக்கு ஒரு முறை மின்சாரம் கணக்கீடு செய்யப்படுவதற்கு பதிலாக 120 நாட்களுக்கு ஒரு முறை கணக்கீடு செய்யப்படுவதை கண்டித்தும் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் முறையாக வழங்கப்படாததை கண்டித்தும் குண்டடத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் குண்டடம் கிழக்கு ஒன்றிய தலைவர்  வெங்கடாசலம்  தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இதில் விவசாயிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து மின்சாரவாரியம் விரைவில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த மாதம் 5 ஆயிரம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி மாபெரும் மறியல் போராட்டம் நடத் தப்படும் என  பாரதிய ஜனதா கட்சியின் குண்டடம் கிழக்கு ஒன்றிய தலைவர்  வெங்கடாசலம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad