''செய்தி எதிரொலியாக'' காரமடை அருகே பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்ய அனுமதித்த தனியார் பேருந்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளால் பறிமுதல் செய்தனர்!!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளியங்காடு செல்லும் மூன்றாம் எண் கொண்ட தனியார் பேருந்து நேற்றைய தினம் காரமடையை கடந்து வெள்ளியங்காடு செல்லும்போது அதிக அளவில் பயணிகளை ஏற்றிகொண்டு சென்று உள்ளது.குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களை அதிக அளவில் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்த நிலையில் அது குறித்து வீடியோ காட்சிகள் அதிக அளவில் வெளியானது இதனை அடுத்து இந்த தகவல் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கவனத்திற்கு சென்ற நிலையில் மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி சத்தியமூர்த்தி சம்பந்தப்பட்ட பேருந்தை சிறைபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். மேலும் மாணவர்களை படியில் தொங்கியபடி பயணம் செய்ய அனுமதித்த பேருந்து ஓட்டுநர் வினோத்குமார் நடத்துனர் ரவிக்குமார் ஆகிய இருவரையும் பொள்ளாச்சியில் செயல்படும் அரசு போக்குவரத்து புத்தாக்க பயிற்சி பள்ளிக்கு அனுப்பி வைத்து இரண்டு நாட்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றி அறிந்து கொள்வதற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக