ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சி பொன்குளம் கிராமத்தில் 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி கட்டிடம் சேதம் ஏற்பட்டது அதனை இடித்து 4 ஆண்டுகள் ஆகிவிட்டது அதற்கு போதிய இடம் இல்லாததால் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தும் கட்டிடம் கட்ட முடியாத நிலையில் தற்போது மாரியம்மன் கோயில் அருகே உள்ள சாதாரணமான ஓடு கொட்டையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது
புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுவதற்கு அரசு ஆரம்ப பள்ளி அருகே உள்ள அரசு நிலத்தில் நிலம் ஒதுக்கி அங்கன்வாடி மையம் கட்டித்தர கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோனிடம் பொன்குளம் கிராமத்தின் சார்பில் கவுன்சிலர் முருகன், அமுதா, முத்துமாரி, காளீஸ்வரி, ராகினி ஆகியோர் மனு கொடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக