திருப்பத்தூர் மாவட்டத்தில் சுடுகாட்டில் உணவு சமைத்து சாப்பிட்ட பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் எச்சரிக்கை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஜூலை, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் சுடுகாட்டில் உணவு சமைத்து சாப்பிட்ட பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்டத்தில் சுடுகாட்டில் உணவு சமைத்து சாப்பிட்ட பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் எச்சரிக்கை! 
நாட்றம்பள்ளி, ஜுலை 14 -

திருப்பத்தூர் மாவட்டம் சுடுகாட்டில் உணவு சமைத்து சாப்பிட்ட பொது மக்கள் அதிகாரிகள் பொய்யாக  என்ஓசி வழங்கி யதால் மல்லப்பள்ளி  கிராமத்தில் கல் அரவை மில் அமைக்க எதிர்ப்பு தெரிவி த்து பொதுமக்கள்  சுடுகாட்டில் உணவு செய்து சாப்பிட்டு காலவரையற்ற போ ராட்டம்! நாளை முதல் உண்ணாவிரத போராட்டம் என எச்சரிக்கை!திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்ல பள்ளி பகுதியில் கல் குவாரி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் கல்வாரி அமைக்கும் இடத்தி லிருந்து சுமார் 500 மீட்டர் அளவில் எந்த ஒரு வீடுகளோ அல்லது கோயில்களோ எதுவும் இருக்கக் கூடாது என்பது அரசா ணை ஆனால் அதனை மறைத்து நாட்ற ம்பள்ளி தாசில்தார் என்ஓசி வழங்கி யதன் காரணமாக மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அப்பகுதியில் கல்குவாரிய அமைக்க எந்த ஒரு தடை இல்லை எனக்கு கூறி என்ஓசி வழங்கியுள்ளது. 
ஆனால் அப்பகுதியில் 500 மீட்டருக்கு உள்ளாகவே வீடுகள் மற்றும் கோவிலும் உள்ளதாக பகுதி மக்கள் தெரிவிக் கின்றனர். மேலும் தாசில்தார் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் என்ஓசி வழங்கியதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றமும் கல் குவாரியை தடை செய்ய முடியாது ஆனால் சட்ட விதிமிரல் கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. 
ஆனால் தாசில்தார் மற்றும் மாசு கட்டுப் பாட்டு வாரியம் தவறான என்ஓசி வழங்கியதன் காரணமாகவும் மேலும் இதுவரை மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுண்ணாம்பு குட்டை பகுதியில் உணவு செய்து சாப்பிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் மேலும் காலவரப் போராட்டத்தில் ஈடுபடுவதா கவும் மேலும் நாளை முதல்  உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் எச்சரிக்கை வீட்டுத்தனர்.

 செய்தியாளர்.
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad